ஆயிரம் சிரங்கள் கொண்டோன்
புருஷன்
ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்
புவியெங்கும் பரந்து
நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.
(1)
இவை அனைத்தும் புருஷனே
முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்
அழிவற்ற பெருநிலையின் தலைவன்
அவன்
பருவுலகு கடந்தோன். (2)
ஈதனைத்தும் அவனது மகிமையே
இதனினும் பெரியோன் புருஷன்
தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்
அழிவற்றது முக்கால் பாகம்
அதுவே ஒளியுலகு. (3)
மேற்சென்றனன் முக்கால்
பாகத்துப் புருஷன்
அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும்
இங்கு
திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்
அசையும் அசையாப்
பொருளனைத்திலும். (4)
அவனிடத்தினின்று விராட் பிறந்தது
விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக)
பிறந்தான் புருஷன்
பிறந்தவன் முன்னும் பின்னுமாய்
புவியெங்கும் நிறைந்தான். (5)
புருஷனே ஆகுதியாக
வேள்வி செய்தனர் தேவர்கள்
வசந்தம் நெய்யாக
கோடை விறகாக
சரத்காலம் அவியுணவாக
ஒரு வேள்வி. (6)
ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்
அவன் மீது நீர் தெளித்தனர்
நேர்வழியினர் ரிஷிகள் கூடி
வேட்டனர் தேவர்கள். (7)
அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று திரண்டது நெய்கலந்த
ஊண்.
உருவாகின
காற்றால் ஆன உயிர்கள்
வனமிருகங்கள்
கிராமத்து விலங்குகள். (8)
அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று பிறந்தன ரிக்குகள்
சாமகீதங்கள்
பிறந்தன சந்தங்கள்
பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)
அதனின்று பிறந்தன பரிகள்
இருவரிசைப் பல் மிருகங்கள்
அதனின்று பிறந்தன பசுக்கள்
வெள்ளாடுகள் செம்மறிகள்.
(10)
புருஷனை வகிர்ந்த போது
கற்பித்தது எவ்வடிவில்?
முகம் எது கை எது?
தொடை எது கால் எது? (11)
பிராமணன் முகமானான்
கைகள் அரசன்
தொடைகள் வைசியன்
பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)
மனத்தினின்று சந்திரன் பிறந்தான்
விழிகளில் கதிரோன்
முகத்தில் இந்திரன் அக்னி
மூச்சில் பிறந்தது காற்று. (13)
கொப்பூழில்
உதித்தது விண்வெளி
சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்
பாதங்களினின்று பூமி
செவிகளினின்று திசைகள்
அவ்வாறே உருவெடுத்தன
உலகங்கள் அனைத்தும். (14)
ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி
மூவேழு சமித்துக்கள் கொண்டு
வேள்வி சமைக்கும் தேவர்கள்
புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)
வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்
அவையே முதல் தர்மங்கள் ஆயின.
முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்
மேன்மை உலகடைவர்
அந்த (தர்மவழிச் செல்லும்)
பெரியோர். (16)
*******
வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான
மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம்
எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும்,
வேள்விகளிலும், வழிபாடுகளிலும்,
பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம்
இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில்
தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில
இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ
வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும்
மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும்
ஊடுருவி நிற்கும்
பரம்பொருளை புருஷன் என்ற
பெயரால் சுட்டி, அந்தப்
பரம்பொருளே சிருஷ்டியின்
கூறுகளாக வியாபித்திருக்கிறார்
என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம்.
பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற
மூன்று அம்சங்களையும்
கொண்டு தன்னளவில்
ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ
சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.
புருஷன் என்ற சொல்லில்
இருந்தே தொடங்கலாம்.
முன் செல்பவன் புருஷன்
(புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன்
புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன்
புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன்
புருஷன் (புரு+ஷ:)
இவ்வாறு இந்தச்
சொல்லுக்கு வேத அகராதிகள்
மற்றும் பிராமணங்களின்
துணை கொண்டு பல்வேறு அர்த்தங்
தரலாம்.
முடிவின்மை:
“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்”
என்ற வாசகம் ஆயிரம் என்ற
எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை,
அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன்
ஒவ்வொரு உயிரின் விழிகளாலும்
பார்க்கிறான்,
ஒவ்வொரு உயிரின்
பாதங்களாலும் நடக்கிறான்
என்பது கருத்து. உபநிஷதமும்,
புருஷனே எல்லா உயிர்களின் முகமும்
(விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.
தோள்களாயிரத்தாய்!
முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்!
பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே
என்று நம்மாழ்வாரும் இந்த அனந்த
ரூபத்தைத் தான் பாடுகிறார்.
வட இந்தியாவில் ஆயிரம் கரங்கள்
கொண்ட காளி கோயில்கள்
உண்டு. காளியின் சிலாரூபம் அமைந்துள்ள
பாறை முழுவதும்
கரங்களாகவே செதுக்கியிருப்பார்க
ஆயிரங்காத்தம்மன் என்று தமிழகத்திலும்
அம்மனுக்குப் பெயர் உண்டு. அந்தத்
திருவுருவங்களை நாம் பார்க்கும் போதும்,
வழிபடும் போதும் எல்லாம், அனந்தமான
பரம்பொருளையே தியானிக்கிறோம்.
தாவோயிசம் என்ற பழம்பெரும் சீன
சமய மரபில் Guyan Yin என்ற
தேவி குறிப்பிடப் படுகிறாள். ஆயிரம்
சுடர்க்கரங்கள் கொண்டு இந்த
தேவியை சித்தரிக்கும் நடனத்தை இந்த
வீடியோவில் காணலாம். அற்புதமும்
தெய்வீகமும் ததும்பும் அழகிய நடனம்!
“நிற்கிறான் பத்து திசைகளுக்கும்
அப்பால்” என்பதன் பொருள்
பூமி முழுவதிலும் ஊடுருவி நின்றாலும்,
அதனுள் கட்டுப் படாதவன் புருஷன்
என்பதாம். ”தசா’ங்குலம்” என்பது மூலச்
சொல். இதனை நேரடியாக
“நிற்கிறான் பத்து அங்குலத்துக்குள்”
என்று மொழிபெயர்த்து,
பத்து அங்குலம் அளவேயுள்ள மனித
இதயத்திலும் புருஷன் உறைகிறான்
என்று அர்த்தமளிக்கும் உரைகள் உண்டு.
பெரிதினும் பெரிதாகவும்,
சிறிதினும் சிறிதாகவும்
உள்ளது பரம்பொருள் என்ற
கருத்திற்கு அது இட்டுச் செல்லும்.
பேரியற்கை:
அடுத்து வரும் மந்திரங்களில்
”இவை அனைத்தும்”
என்பது வெளிப்பட்டு நிற்கும்
பிரபஞ்சத்தை (manifested universe)
குறிக்கிறது. அது புருஷனின் ஒரு சிறு பகுதி,
கால் பாகம் மட்டுமே. ”முக்கால்
பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன்
பொருள்
நமக்கு வெளிப்பட்டு நிற்கும்
இயற்கையை விடவும்,
வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப்
பெரியது என்பதாம். நாம் வசிக்கும்
பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம்
போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள
பால்வீதி போல, அந்தப்
பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe)
போல, ஏராளமான கிரகங்களும் சூரியக்
குடும்பங்களும், பால்வீதிகளும்,
பிரபஞ்சங்களும்
கொண்டது பேரியற்கை. நவீன
அண்டவியல் (cosmology) கூறும் இந்த
பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ
மொழியில் இந்த மந்திரமும்
கூறுகிறது.
”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்;
பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக
புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த
மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன்
என்பது வெளிப்படாத
பேரியற்கை (அவ்யக்தம்).
இரண்டாவதாகக்
கூறப்பட்டது வெளிப்பட்ட
இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த
வெளிப்பாட்டிற்கான சாதனம்
அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய
தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப்
போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின்
விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம்.
இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-
சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத
சொற்பொருள்
விளக்கங்களில் “விராட்”
என்பது பெண்பாற்
சொல்லாகக்
கொள்ளப் படுகிறது என்பதும்
குறிப்பிடத் தக்கது.
வியாழன், 20 மார்ச், 2014
ரிக்வேதம் பத்தாவது மண்டலம் ,90வது சூத்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக