வியாழன், 20 மார்ச், 2014

பிரபஞ்சவேள்வி ( ரிக்வேதம் பத்தாவது மண்டலம் )

அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச
சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக
உருவகம் செய்கின்றன. அக்னி,
நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக்
கொண்டு நிகழ்த்தப்
படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள்
இயற்கை இடர்களிலிருந்து மக்களையும்
கால்நடைகளையும் காக்கவும், லௌகீக
தேவைகளை நிறைவேற்றவும்
தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித்
தன்மை கொண்ட பிரார்த்தனைகள்
மட்டுமே என்பதாக நவீனத்துவ
அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள்
விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத
ரிஷிகள் அத்துடன்
நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க
வேண்டும். இந்தச் சடங்கு உடனடியாக
ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக
மாறுகிறது. அந்த கணத்தில்
அங்கு ஒரு மகத்தான தத்துவப்
பாய்ச்சல் நிகழ்கிறது.
யக்ஞம் என்பது sacrifice
என்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப் பட்டு,
பின்னர் அந்தச் சொல்
மூலமாகவே எல்லா வேத
மொழியாக்கங்களிலும்
பொருள் கொள்ளப்
பட்டது. இது மூலச் சொல்லின்
ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன்
முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம்
என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேற
மாற்றும் ஒரு செயல்பாடாகும்.
பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும்
மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச்
செயல்பாடு யக்ஞம். இந்தக்
கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம்
காண்கிறோம் –
”முன்பு பிரம்மதேவன்
வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப்
படைத்துச் சொல்லினான்:
“இதனால் பல்குவீர்கள், நீங்கள்
விரும்பும்
விருப்பங்களையெல்லாம்
உங்களுக்கிது கறந்து தரும்.
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்;
அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான
பாவனை செய்வதனால்
உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”
தொடக்கத்தில் புருஷன்
ஒருவரே இருக்கிறார். இந்த
ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி.
அதை நிகழ்த்துவது காலம். எனவே,
காலத்தின் மூன்று பரிமாணங்களான
வசந்தம், கோடை,
சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு,
அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக
மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின்
படி இந்த மூன்று பருவகாலங்களும்
முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய
மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக்
கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக