புருஷ சூக்தத்தில் இரண்டு வகை சிருஷ்டிகள்
கூறப் படுவதாக புராதன வேத
உரையாளர் சாயணர் விளக்குகிறார் –
பூர்வ சிருஷ்டி (முதல் படைப்பு) மற்றும் உத்தர
சிருஷ்டி (அடுத்த படைப்பு). பூர்வ சிருஷ்டியில்
புருஷன் பிரபஞ்சமாகவும், அதில் உள்ள
உயிர்களாகவும் வெளிப்படுகிறார்.
இது 4-5 மந்திரங்களில் கூறப் பட்டது. உத்தர
சிருஷ்டியில் அந்த உயிர்களின்
வாழ்க்கைக்கான உணவு முதலிய
தேவைகளாகவும், சாதனங்களாகவும்,
அந்த உயிர்களின் செயல்களாகவும்
எல்லாம் புருஷனே ஆகிறார். 6ம்
மந்திரத்திலிருந்து உத்தர சிருஷ்டி விளக்கப்
படுகிறது.
”
தோன்றிய வேள்விப் புருஷன்” என்னும்
ஏழாம் மந்திரம் புருஷனையே வேள்வியாக
உருவகிக்கிறது. ”நேர்வழியினர்”
என்பது ஸாத்யர்கள் எனப்படும்
ஆதி தேவர்களைக் குறிக்கும்.
இந்த மந்திரங்கள் சிருஷ்டியின்
கூறுகளை சம்பிரதாயமாக விரிவாக
வர்ணிக்கவில்லை என்பதைக் கவனிக்க
வேண்டும். எல்லா இயற்கைக் கூறுகளையும்,
மிருகங்களையும், பறவைகளையும் தேவர்களையும்
மனிதர்களையும்
ஒவ்வொன்றாகப் படைத்தார்
என்று பட்டியலிடுவது போல இதில் வரவில்லை.
ஒரு தேர்ந்த ஓவியன் தூரிகைகளால்
அங்கங்கு சில அர்த்தமுள்ள கோடுகளை மட்டும்
தீற்றிச் செல்வது போல சிருஷ்டியைக் கூறிச்
செல்கின்றன இந்த மந்திரங்கள்.
இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்”
என்ற சொல்லுக்கு ஞானம்
என்றும் பொருள்
கொள்வர். பரிகள் (அச்’வா:),
பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:)
ஆகிய
சொற்களுக்கு குறியீட்டு ரீதியாக
பொருள் கூறும் விளக்கங்களும்
உண்டு.
இந்திய மெய்ஞான, தாந்திரீக
மரபுகளில் “வாக்கு” என்பது சிருஷ்டிக்கும்
சக்தியாகவே கருதப் படுகிறது.
பீஜாட்சரங்கள், மந்திரங்கள்,
உச்சாடனங்கள் ஆகியவற்றில்
சிருஷ்டியின் அளவற்ற சக்தி ரகசியமாக
உறைந்துள்ளதாகவும் (குஹாஹிதம்)
இம்மரபுகள் கருதுகின்றன. சப்த பிரம்மம்
அல்லது வாக்கு சிருஷ்டியின் முதல்
வெளிப்பாடு என்பதையே ”ரிக், யஜுர்,
சாம வேதங்களும், சந்தஸ் எனப்படும்
கவிதை வடிவங்களும் பிரபஞ்ச
வேள்வியிலிருந்தே தோன்றின” என்ற பாடல்
உரைக்கிறது. மிருகங்களுக்கு அடுத்தபடியாக
உடனே மந்திரங்களும் சந்தங்களும்
கூறப்படுவது பருண்மையிலிருந்து நுண்மையை நோக்
நகர்வைக் காட்டுகிறது.
வியாழன், 20 மார்ச், 2014
சிருஷ்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக