வியாழன், 20 மார்ச், 2014

நால்வகை மக்கள் (வர்ணாசிரம்)

”பிராமணன் முகமானான் – கைகள்
அரசன் – தொடைகள் வைசியன் –
பாதங்களில் சூத்திரன் தோன்றினான்”

என்ற மந்திரம் பல்வேறு வகையான
விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும்
உள்ளாகியுள்ளது.
இந்து எதிர்ப்பாளர்கள் வேத
காலத்திலேயே சாதி வேறுபாடுகளும்,
அடக்குமுறைகளும் இருந்தன
என்பதற்கு சான்றாக இந்த மந்திரம்
உள்ளது என்று கூறி இதனைக்
கட்டுடைக்கின்றனர்.
ஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும்,
ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும்
கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள்
ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள்.

நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின்
அங்கங்கள் என்றால் அதன்
பொருள் என்ன?
நான்கு வர்ணங்களும் தெய்வத்
தன்மை கொண்டவை. இதில்
ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும்,
விராட் புருஷன் குறைபட்டவனாக,
ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான்
என்பதே பொருள். விராட்
புருஷனின் கால்களில் தோன்றியவர்கள்
என்பதால் சூத்திரர்கள்
தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப்
படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம்
வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க
பூர்வமாக இல்லை.
ஏனென்றால்
இதே சூக்தத்தில்
இன்னொரு மந்திரத்தில்

"பாதங்களினின்று பூமி தோன்றியது”
என்று வருகிறது. அந்த பூமியை வேதம்
வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக
அன்னையாகத் தான்
கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக
அல்ல.

நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான
சான்று இந்த மந்திரத்தில்
கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால்
பிற்காலத்தில்
வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத்
தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப்
படவில்லை.

வேதங்களில் எங்கு தேடினாலும்
பிறப்பு அடிப்படையிலான சமூகப்
பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத்
தாழ்வுகளுக்கான சான்றுகள்
கிடைக்காது.

ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான
உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –
வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென
ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென
அனைவரையும் என
உஷை
புவனத்தின்
ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6)

கூறுகிறது –
பிராமணர்களுக்கு நல்லொ
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.
சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது -
நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.
வேதகால வர்ண
அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து,
அதற்குப் பின்னர் புராணங்களிலும்
ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண
அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர்
அம்பேத்கர் கருதுகிறார். முதல்
காலகட்டத்தில் வர்ணம்
என்பது ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு ஒருவரால்
செய்யப்படும் தொழிலாக
அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில்
ஒருவர்
வர்ணத்தை மாற்றிக்கொள்ள
முடியும். இரண்டாம் கால கட்டத்தில்
வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் ஒருவரது வர்ணம்
நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன்
பின்னர் மாற்றிக்கொள்ள
முடியாது.
மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல
அடிப்படையில் மாறியது. இதற்கான
சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர்
எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில்
புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம்
வேதகால வர்ண அமைப்பின்
முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது
வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தர் இந்த மந்திரம்
நமது பொதுப் புத்திக்குப்
புலப்படுவதைக் காட்டிலும் மகத்தான
பொருள் கொண்ட
ஒன்று என்று கூறுகிறார் –
“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள்
சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து,
அவரது சிரம், புஜங்கள்,
தொடைகள் மற்றும்
பாதங்களில் இருந்து உதித்ததாக
சித்தரிக்கப் படுகிறது.

நமக்கு இது ஒரு கவித்துவமான
உருவகமாகத் தோற்றமளிக்கிறது –
பிராமணர்கள் அறிவின் மக்கள்,
க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம்,
வைசியர்கள்
உற்பத்தி செய்பவர்கள்,
சூத்திரர்கள் பணி செய்பவர்கள்.
ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக்
கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு,
ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட
மேலானது. தெய்வீக
சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது.
அவர்களைப் பொறுத்த
வரையில் மனித சமுதாயம்
என்பது பிரபஞ்ச வடிவான
புருஷனைத் தன் வாழ்வில்
ஒவ்வொரு மனிதனும்
வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும்.
ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக
உலகமாகவும்,
பருவெளிக்கு அப்பாலான
பிரபஞ்சமாகவும்
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறான்.
இங்கு நாம் காணும்
கருத்து என்ன? நான்கு பிரிவுகளும்
எதை வெளிப்படுத்துகின்றன?
தெய்வீகத்தை அறிவாகவும்,
தெய்வீகத்தை ஆற்றலாகவும்,
தெய்வீகத்தை உற்பத்தி –
துய்த்தல் –
ஒத்துழைப்பு என்பதாகவும்,
தெய்வீகத்தை தொண்டு
பணிதல் – வேலை என்பதாகவும் அவை
வெளிப்படுத்துகின்றன. இந்த
நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச
விதிகளுக்கு பொறுப்பாகின்
எல்லாவற்றின் ஒழுங்கையும்,
இயல்புகளையும்
சிந்தித்து கட்டமைக்கிறது அறிவு என்ற
விதி. அவற்றை நடைமுறைப் படுத்தி,
நிலைநிறுத்தி,
அதிகாரபூர்வமாக்குகிறது ஆற்றல்
என்ற விதி. அதன் உறுப்புகளை சீராக
அமைக்கிறது ஒத்துழைப்பு என்ற விதி.
இவற்றின் ஏவல்களைச்
செய்கிறது பணி என்ற விதி”

பிரபஞ்சமும் மனித உடலும்

அடுத்துள்ள மந்திரங்கள்
பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப்
பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும்,
சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன்
– அக்னியுடனும், காற்றை மூச்சுடனும்
தொடர்புறுத்தும்
கவிதை உருவகங்கள் ஆழமானவை.
முடிவற்று விரிந்து செல்லும்
விண்வெளி புருஷனின்
தொப்புள்
என்று கூறியது அபாரமான அழகியல்.
இதையே மேலும் விரித்து,
விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும்
தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான
பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத்
தொடங்குவதாக பிற்காலத்திய
புராணங்கள் அற்புதமான
கலைநயத்துடன் விவரிக்கின்றன.
“குழலழகர் வாயழகர் கண்ணழகர்,
கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”
என்று ஆண்டாள் சிலிர்ப்புடன்
பாடுகிறாள். உடலியல் ரீதியாக,
தாயின் கருவில் இருந்து உதிக்கும்
ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும்
தொப்புள்
கொடி வழியாகவே நிகழ்கிறது எ
இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
பிரபஞ்ச சிருஷ்டியை மனித உடலாக
உருவகித்து இந்தப் பழங்கவிதை பாடுவதில்
உள்ள நுட்பம் கவனத்துக்குரியது. உலகில்
எல்லா கலாசாரங்களிலும் கவிதைகள்
எழுதப் படுகின்றன. அவை முற்றிலும்
வேறு வேறான கவிஞர்களால், முற்றிலும்
வேறு வேறான இயற்கைச் சூழல்களில், சமூக
சூழல்களில் எழுதப் பட்டாலும்,
இவை அனைத்தையும் தாண்டி நல்ல கவிதைகள்
பொதுவாக
புரிந்து கொள்ளவும் ரசிக்கவும்
படுகின்றன.
இது எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ஜ
சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
அதில் அவர் கூறுகிறார் –
”சர்வதேச அளவில், மானுடப்
பொதுவாக,
கவிமொழியைத்
தீர்மானிக்கும்
பொது அம்சம் என்ன?
மானுட உடல்தான் என்று எனக்குப்
படுகிறது. மனித மொழியைத்
தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம்
மிக முக்கியமானது. உடலின் வடிவம்
மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது.
உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச
இயல்புகள் அடையாளப் படுத்தப்
படுகின்றன. உடலினூடாக
அன்றி தூலப்
பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்
என்பதால் உடலையே நாம்
பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால்
அது வியப்பில்லை.”
ஜெயமோகன் இங்கு கண்டடையும் இந்தக்
கவி தரிசனம், வரலாறு புகமுடியாத
தொல்பழங்காலத்தில் இந்த
மண்ணில் காலூன்றி நின்று வேத ரிஷிகள்
பாடிய மகத்தான கவிதைகளின்
எதிரொலியே ஆகும்.
இந்த தரிசனத்திலிருந்து தான்,
இந்து மதத்தில் உருவ
வழிபாடு என்பது உருக்
கொள்கிறது. மனிதன் தன் உடல்
மூலமாகவே பிரபஞ்சத்தை அறியமுடியும்,.
அதனால் தான், பிரபஞ்ச வடிவான
இறைவனை மனித வடிவிலோ அல்லது மனித –
மிருக –இயற்கை சார்ந்த
வடிவங்களிலோ பிரதிஷ்டை செய்தார்கள்.
தெய்வங்களின் உறைவிடங்களான
கோயில்களையும் மனித உடலின்
குறியீடாகவே அமைத்தார்கள். இந்த
வகையில் தியானிப்பதும் வணங்குவதும்
மனிதனை தளைபட்ட அறிதலில்
இருந்து தளையற்ற பிரபஞ்ச
அறிதலை நோக்கி இட்டுச் செல்லும்
என்று நமது ரிஷிகள் கருதினார்கள்.

சிருஷ்டி

புருஷ சூக்தத்தில் இரண்டு வகை சிருஷ்டிகள்
கூறப் படுவதாக புராதன வேத
உரையாளர் சாயணர் விளக்குகிறார் –
பூர்வ சிருஷ்டி (முதல் படைப்பு) மற்றும் உத்தர
சிருஷ்டி (அடுத்த படைப்பு). பூர்வ சிருஷ்டியில்
புருஷன் பிரபஞ்சமாகவும், அதில் உள்ள
உயிர்களாகவும் வெளிப்படுகிறார்.
இது 4-5 மந்திரங்களில் கூறப் பட்டது. உத்தர
சிருஷ்டியில் அந்த உயிர்களின்
வாழ்க்கைக்கான உணவு முதலிய
தேவைகளாகவும், சாதனங்களாகவும்,
அந்த உயிர்களின் செயல்களாகவும்
எல்லாம் புருஷனே ஆகிறார். 6ம்
மந்திரத்திலிருந்து உத்தர சிருஷ்டி விளக்கப்
படுகிறது.

தோன்றிய வேள்விப் புருஷன்” என்னும்
ஏழாம் மந்திரம் புருஷனையே வேள்வியாக
உருவகிக்கிறது. ”நேர்வழியினர்”
என்பது ஸாத்யர்கள் எனப்படும்
ஆதி தேவர்களைக் குறிக்கும்.
இந்த மந்திரங்கள் சிருஷ்டியின்
கூறுகளை சம்பிரதாயமாக விரிவாக
வர்ணிக்கவில்லை என்பதைக் கவனிக்க
வேண்டும். எல்லா இயற்கைக் கூறுகளையும்,
மிருகங்களையும், பறவைகளையும் தேவர்களையும்
மனிதர்களையும்
ஒவ்வொன்றாகப் படைத்தார்
என்று பட்டியலிடுவது போல இதில் வரவில்லை.
ஒரு தேர்ந்த ஓவியன் தூரிகைகளால்
அங்கங்கு சில அர்த்தமுள்ள கோடுகளை மட்டும்
தீற்றிச் செல்வது போல சிருஷ்டியைக் கூறிச்
செல்கின்றன இந்த மந்திரங்கள்.
இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்”
என்ற சொல்லுக்கு ஞானம்
என்றும் பொருள்
கொள்வர். பரிகள் (அச்’வா:),
பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:)
ஆகிய
சொற்களுக்கு குறியீட்டு ரீதியாக
பொருள் கூறும் விளக்கங்களும்
உண்டு.
இந்திய மெய்ஞான, தாந்திரீக
மரபுகளில் “வாக்கு” என்பது சிருஷ்டிக்கும்
சக்தியாகவே கருதப் படுகிறது.
பீஜாட்சரங்கள், மந்திரங்கள்,
உச்சாடனங்கள் ஆகியவற்றில்
சிருஷ்டியின் அளவற்ற சக்தி ரகசியமாக
உறைந்துள்ளதாகவும் (குஹாஹிதம்)
இம்மரபுகள் கருதுகின்றன. சப்த பிரம்மம்
அல்லது வாக்கு சிருஷ்டியின் முதல்
வெளிப்பாடு என்பதையே ”ரிக், யஜுர்,
சாம வேதங்களும், சந்தஸ் எனப்படும்
கவிதை வடிவங்களும் பிரபஞ்ச
வேள்வியிலிருந்தே தோன்றின” என்ற பாடல்
உரைக்கிறது. மிருகங்களுக்கு அடுத்தபடியாக
உடனே மந்திரங்களும் சந்தங்களும்
கூறப்படுவது பருண்மையிலிருந்து நுண்மையை நோக்
நகர்வைக் காட்டுகிறது.

பிரபஞ்சவேள்வி ( ரிக்வேதம் பத்தாவது மண்டலம் )

அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச
சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக
உருவகம் செய்கின்றன. அக்னி,
நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக்
கொண்டு நிகழ்த்தப்
படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள்
இயற்கை இடர்களிலிருந்து மக்களையும்
கால்நடைகளையும் காக்கவும், லௌகீக
தேவைகளை நிறைவேற்றவும்
தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித்
தன்மை கொண்ட பிரார்த்தனைகள்
மட்டுமே என்பதாக நவீனத்துவ
அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள்
விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத
ரிஷிகள் அத்துடன்
நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க
வேண்டும். இந்தச் சடங்கு உடனடியாக
ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக
மாறுகிறது. அந்த கணத்தில்
அங்கு ஒரு மகத்தான தத்துவப்
பாய்ச்சல் நிகழ்கிறது.
யக்ஞம் என்பது sacrifice
என்று ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப் பட்டு,
பின்னர் அந்தச் சொல்
மூலமாகவே எல்லா வேத
மொழியாக்கங்களிலும்
பொருள் கொள்ளப்
பட்டது. இது மூலச் சொல்லின்
ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன்
முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம்
என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேற
மாற்றும் ஒரு செயல்பாடாகும்.
பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும்
மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச்
செயல்பாடு யக்ஞம். இந்தக்
கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம்
காண்கிறோம் –
”முன்பு பிரம்மதேவன்
வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப்
படைத்துச் சொல்லினான்:
“இதனால் பல்குவீர்கள், நீங்கள்
விரும்பும்
விருப்பங்களையெல்லாம்
உங்களுக்கிது கறந்து தரும்.
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்;
அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான
பாவனை செய்வதனால்
உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”
தொடக்கத்தில் புருஷன்
ஒருவரே இருக்கிறார். இந்த
ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி.
அதை நிகழ்த்துவது காலம். எனவே,
காலத்தின் மூன்று பரிமாணங்களான
வசந்தம், கோடை,
சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு,
அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக
மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின்
படி இந்த மூன்று பருவகாலங்களும்
முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய
மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக்
கொள்ளலாம்.

ரிக்வேதம் பத்தாவது மண்டலம் ,90வது சூத்கம்

ஆயிரம் சிரங்கள் கொண்டோன்
புருஷன்
ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்
புவியெங்கும் பரந்து
நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.
(1)
இவை அனைத்தும் புருஷனே
முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்
அழிவற்ற பெருநிலையின் தலைவன்
அவன்
பருவுலகு கடந்தோன். (2)
ஈதனைத்தும் அவனது மகிமையே
இதனினும் பெரியோன் புருஷன்
தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்
அழிவற்றது முக்கால் பாகம்
அதுவே ஒளியுலகு. (3)
மேற்சென்றனன் முக்கால்
பாகத்துப் புருஷன்
அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும்
இங்கு
திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்
அசையும் அசையாப்
பொருளனைத்திலும். (4)
அவனிடத்தினின்று விராட் பிறந்தது
விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக)
பிறந்தான் புருஷன்
பிறந்தவன் முன்னும் பின்னுமாய்
புவியெங்கும் நிறைந்தான். (5)
புருஷனே ஆகுதியாக
வேள்வி செய்தனர் தேவர்கள்
வசந்தம் நெய்யாக
கோடை விறகாக
சரத்காலம் அவியுணவாக
ஒரு வேள்வி. (6)
ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்
அவன் மீது நீர் தெளித்தனர்
நேர்வழியினர் ரிஷிகள் கூடி
வேட்டனர் தேவர்கள். (7)
அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று திரண்டது நெய்கலந்த
ஊண்.
உருவாகின
காற்றால் ஆன உயிர்கள்
வனமிருகங்கள்
கிராமத்து விலங்குகள். (8)
அனைத்தும் எரிந்த அவ்வேள்வி
அதனின்று பிறந்தன ரிக்குகள்
சாமகீதங்கள்
பிறந்தன சந்தங்கள்
பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)
அதனின்று பிறந்தன பரிகள்
இருவரிசைப் பல் மிருகங்கள்
அதனின்று பிறந்தன பசுக்கள்
வெள்ளாடுகள் செம்மறிகள்.
(10)
புருஷனை வகிர்ந்த போது
கற்பித்தது எவ்வடிவில்?
முகம் எது கை எது?
தொடை எது கால் எது? (11)
பிராமணன் முகமானான்
கைகள் அரசன்
தொடைகள் வைசியன்
பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)
மனத்தினின்று சந்திரன் பிறந்தான்
விழிகளில் கதிரோன்
முகத்தில் இந்திரன் அக்னி
மூச்சில் பிறந்தது காற்று. (13)
கொப்பூழில்
உதித்தது விண்வெளி
சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்
பாதங்களினின்று பூமி
செவிகளினின்று திசைகள்
அவ்வாறே உருவெடுத்தன
உலகங்கள் அனைத்தும். (14)
ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி
மூவேழு சமித்துக்கள் கொண்டு
வேள்வி சமைக்கும் தேவர்கள்
புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)
வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்
அவையே முதல் தர்மங்கள் ஆயின.
முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்
மேன்மை உலகடைவர்
அந்த (தர்மவழிச் செல்லும்)
பெரியோர். (16)
*******
வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான
மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம்
எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும்,
வேள்விகளிலும், வழிபாடுகளிலும்,
பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம்
இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில்
தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில
இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ
வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும்
மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும்
ஊடுருவி நிற்கும்
பரம்பொருளை புருஷன் என்ற
பெயரால் சுட்டி, அந்தப்
பரம்பொருளே சிருஷ்டியின்
கூறுகளாக வியாபித்திருக்கிறார்
என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம்.
பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற
மூன்று அம்சங்களையும்
கொண்டு தன்னளவில்
ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ
சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.
புருஷன் என்ற சொல்லில்
இருந்தே தொடங்கலாம்.
முன் செல்பவன் புருஷன்
(புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன்
புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன்
புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன்
புருஷன் (புரு+ஷ:)
இவ்வாறு இந்தச்
சொல்லுக்கு வேத அகராதிகள்
மற்றும் பிராமணங்களின்
துணை கொண்டு பல்வேறு அர்த்தங்
தரலாம்.
முடிவின்மை:
“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்”
என்ற வாசகம் ஆயிரம் என்ற
எண்ணிக்கையை அல்ல, அளவிட முடியாமையை,
அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன்
ஒவ்வொரு உயிரின் விழிகளாலும்
பார்க்கிறான்,
ஒவ்வொரு உயிரின்
பாதங்களாலும் நடக்கிறான்
என்பது கருத்து. உபநிஷதமும்,
புருஷனே எல்லா உயிர்களின் முகமும்
(விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.
தோள்களாயிரத்தாய்!
முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்!
பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே
என்று நம்மாழ்வாரும் இந்த அனந்த
ரூபத்தைத் தான் பாடுகிறார்.
வட இந்தியாவில் ஆயிரம் கரங்கள்
கொண்ட காளி கோயில்கள்
உண்டு. காளியின் சிலாரூபம் அமைந்துள்ள
பாறை முழுவதும்
கரங்களாகவே செதுக்கியிருப்பார்க
ஆயிரங்காத்தம்மன் என்று தமிழகத்திலும்
அம்மனுக்குப் பெயர் உண்டு. அந்தத்
திருவுருவங்களை நாம் பார்க்கும் போதும்,
வழிபடும் போதும் எல்லாம், அனந்தமான
பரம்பொருளையே தியானிக்கிறோம்.
தாவோயிசம் என்ற பழம்பெரும் சீன
சமய மரபில் Guyan Yin என்ற
தேவி குறிப்பிடப் படுகிறாள். ஆயிரம்
சுடர்க்கரங்கள் கொண்டு இந்த
தேவியை சித்தரிக்கும் நடனத்தை இந்த
வீடியோவில் காணலாம். அற்புதமும்
தெய்வீகமும் ததும்பும் அழகிய நடனம்!
“நிற்கிறான் பத்து திசைகளுக்கும்
அப்பால்” என்பதன் பொருள்
பூமி முழுவதிலும் ஊடுருவி நின்றாலும்,
அதனுள் கட்டுப் படாதவன் புருஷன்
என்பதாம். ”தசா’ங்குலம்” என்பது மூலச்
சொல். இதனை நேரடியாக
“நிற்கிறான் பத்து அங்குலத்துக்குள்”
என்று மொழிபெயர்த்து,
பத்து அங்குலம் அளவேயுள்ள மனித
இதயத்திலும் புருஷன் உறைகிறான்
என்று அர்த்தமளிக்கும் உரைகள் உண்டு.
பெரிதினும் பெரிதாகவும்,
சிறிதினும் சிறிதாகவும்
உள்ளது பரம்பொருள் என்ற
கருத்திற்கு அது இட்டுச் செல்லும்.
பேரியற்கை:
அடுத்து வரும் மந்திரங்களில்
”இவை அனைத்தும்”
என்பது வெளிப்பட்டு நிற்கும்
பிரபஞ்சத்தை (manifested universe)
குறிக்கிறது. அது புருஷனின் ஒரு சிறு பகுதி,
கால் பாகம் மட்டுமே. ”முக்கால்
பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன்
பொருள்
நமக்கு வெளிப்பட்டு நிற்கும்
இயற்கையை விடவும்,
வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப்
பெரியது என்பதாம். நாம் வசிக்கும்
பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம்
போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள
பால்வீதி போல, அந்தப்
பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe)
போல, ஏராளமான கிரகங்களும் சூரியக்
குடும்பங்களும், பால்வீதிகளும்,
பிரபஞ்சங்களும்
கொண்டது பேரியற்கை. நவீன
அண்டவியல் (cosmology) கூறும் இந்த
பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ
மொழியில் இந்த மந்திரமும்
கூறுகிறது.
”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்;
பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக
புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த
மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன்
என்பது வெளிப்படாத
பேரியற்கை (அவ்யக்தம்).
இரண்டாவதாகக்
கூறப்பட்டது வெளிப்பட்ட
இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த
வெளிப்பாட்டிற்கான சாதனம்
அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய
தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப்
போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின்
விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம்.
இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-
சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத
சொற்பொருள்
விளக்கங்களில் “விராட்”
என்பது பெண்பாற்
சொல்லாகக்
கொள்ளப் படுகிறது என்பதும்
குறிப்பிடத் தக்கது.